1. முதல் முக்கிய குணமே அதுவா முக்கர வரைக்கும் இவனா கக்கூஸ் போக மாட்டான். இதுல பிரச்சனை அவனுக்கு இல்ல. கூட இருக்கிறவனுக்கு தான். நாத்தம் தாங்காது. தனியா வீட்டுக்குள்ளே இருந்தா கூட பரவா இல்ல. வீட்டுக்குள்ள இருக்கறதும் இவனை மாறியே தான். minus multiplied by minus is equal to plus ஆகிடும். இப்பிடி சொன்னா இவனுக்கு புரியாது. கணக்குல weaku. ஒண்ணா வயக்காட்டுல போகும்போது ரெண்டு பேரு நாத்தமும் சேர்ந்து, நாத்தம் தெரியாதுள்ள அது தான் அதுக்கு அர்த்தம். இவுனுங்களுக்கு விளக்கம் வேற குடுக்கணும். இல்லனா காக்கா பிரியாணியை முழுசா சாப்டுட்டு ஏன் முட்டை வைக்கல, அது தான் doubtu அப்டின்னுவான். சரி அத விடுவோம். நாத்தம் ஊரெல்லாம் அடிக்க வைப்பான். இது முதல் பிரச்சனை.
2. ரெண்டாவது முக்கிய பிரச்சனை இவன் ஒரு சோம்பேறி நாய். எந்த வேலையும் செய்யாம கைக்கு காசு வரணும்னுவான். அதுக்காக இவன் என்கிட்ட பட்ட பாடு. இருந்தாலும் சற்றும் தளராத விக்ரமாதித்தன் மீண்டும் வேதாளத்தை தேடி போனான்ற மாறி. திருப்பி திருப்பி முயற்சி பண்ணுவான். இந்த முயற்சியை நல்ல வழில உபயோகிச்சு இருந்தா இவன் எப்பவோ பணக்காரன் ஆகி இருப்பான். என்ன பண்ண இவன் கெரகம் என்கிட்ட மாட்டிக்கினான். இவன் பண்ணாத fraud இல்ல. இவன் பொடி நடையா நடந்து போய், பொடி வாங்கி போட்டாலும் போடுவானே தவிர, என் கூட போட்டா போட்டிக்கு கூட பொட்டிக்கடைக்கு வந்து பொட்டலம் மடிக்கற வேலையை செய்ய மாட்டான். வீனா போனவனுக்கு வீனா போன கௌரவம்.
3. மூணாவது பிரச்சனை இவன் ஒரு குடிகாரன். பாட்டில கழுவி குடிக்கறவன தான் பாத்திருப்பீங்க. இவன் glassa நக்கியே காலி பண்ணுவான். கழுவுனாலும் கொஞ்சம் ஓட்டினு இருக்குமாம் அது தான் clean sweep பண்றானாம். குடிகார நாய்க்கு குடிக்கற செலவே முக்காவாசி ஆகும். மீதிக்கு என்ன பண்ணலாம்னு அப்புறமா குடிச்சிட்டு யோசிக்கலாம்னு, மீதி இருந்த காசுக்கும் cutting வாங்கிடுவான். குடிக்கறது உள்ளூர் சரக்கு வேணாமாம். பிரேசில்லேர்ந்து பன்றி சாராயம் தான் வேணுமாம். அது என்ன பன்றி சாராயம்? பண்ணி கூட அந்த சரக்க குடிக்காம, கேவலமா இருக்குனு காரி துப்பிடுமாம். அது தான் வேணும்னு ஒரே அடம். Pig waste, குடிகாரன் taste.

Comments
Post a Comment