செய்தி : தமிழகம் முழுவதும் தி.மு.க முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தொடர்புடைய 30 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை.
இல்லை அது 32 ன்றேன் . 2 சின்ன வீடு அது . அது தான் பெரிய வீடே . அத விட்டுட்டு கட்டுமானம் வசதி இல்லாத சொந்த வீட்டுக்கு போறாங்களேன்னு லஞ்சம் ஒழிப்பு துறையை பாத்து இவுரே கிண்டல் அடிச்சாராம் . சின்ன வீட்டுல அப்புடி என்ன கட்டுமான வசதினா . இவுரு tired ஆ படுத்தாலும் அதுவே ஊடு கட்டிடுதாம் . சரி அது அவுரு சொந்த விஷயம் நாம ஏன் தலை இடனும்னு பாத்தா . எல்லா தஸ்தாவேஜுகளையும் அலுங்காம குலுங்காம அங்க கொண்டு போய் தான் வைக்கறாராம் .
அப்புடி என்ன தஸ்தாவேஜுகள்னு கேட்டா நாலு பிஞ்சு போன பேப்பரும் , அத போட ஒரு file உம தானாம் . இத தான் ரகசிய அமைச்சகத்தின் தஸ்தாவேஜுகள்னு சொல்லிட்டு திரிவாராம் . அப்டி என்னடா அது உள்ள இருக்குனு பாத்தா . எந்த அமைச்சர் எந்த சின்ன வீட்டுக்கு போறான்னு லஞ்சம் வாங்குற போலீசை வச்சி கண்டுபுடிச்சிகிட்டு மிரட்டி மிரட்டி தொழில் பண்ணுவாராம் . நல்ல அரசியல் பண்ணாருன்னு சொல்றத விட நல்ல தொழில் பண்ணாருன்னு தான் சொல்லணுமாம் .
இவுரு லஞ்சம் எல்லாம் பெரிய level தானாம் . மத்தவுங்க கிட்ட ஏன் லஞ்சம் வாங்க மாட்ரீங்கன்னு கேட்டா . Sumal fellows அவுங்க . என் range ஏ வேறன்றுவாராம் . அப்ப பீடி , சிப்ஸ், அதெல்லாம்னு கேட்டா I Love only Scotch அப்டின்னுவாராம் . ஆனா சின்ன வீட்டுக்கு போயிட்டார்னா ஸல் பேட்டை சரக்கோட பீடி தானாம் . ஆமாம் ஏன் இந்த acting னு கேட்டா . என்கிட்ட File ஏ இருக்கு மூடினு போ அப்டின்றுவாராம் .

Comments
Post a Comment