செய்தி : தீபக் குமார் அரசியலுக்கு கத்து குட்டி . அவருக்கு ஒன்றும் தெரியாது .
இவுரு பெரிய MIT Professor . All round போயிட்டு வந்து rest எடுக்குற time waste ஆக கூடாதுன்னு பத்திரிக்கைக்கு வந்தாரு . டேய் நீ எந்த மாம்பழ தோப்புல என்ன வேலை பண்ணிட்டு வெளில வந்து I am a ரிப்போர்ட்டர் reporting on duty ன்னு சொல்வேன்னு எனக்கு தெரியும். சொன்னா வெட்க கேடு . அப்ப சொல்ல மாட்டீங்களா ? அதெப்புடி எங்களுக்கு கிச்சுளி கிச்சான் மூட்டி விட ஆள் வேணுமே. சரி அப்புடி என்ன வெட்க கேடு ? நீ பத்திரிக்கை நடத்திரியோ இல்லையோ மஞ்சா பத்திரிக்கை நல்லா நடுத்தர. என்னண்ணே சொல்ற ? இவன் ரொம்ப டீசெண்டான ஆளா இருக்கானேண்ணா. இவன் பேப்பர் வாங்கறதே மக்கள் கிசு கிசு படிக்கத்தான் . இவன் சொல்ற நியூஸை யாருமே படிக்கறது இல்லை .
ஆமாம் தீபக் குமாருக்கு ஒன்றும் தெரியாது . ஏன்டா டேய் எந்த ஹீரோயினி யாரை லவ் பண்றா . எந்த ஹோட்டல்ல தங்கரா இதெல்லாம் நோட் பண்ணவாடா நான் அரசியலுக்கு வந்தேன் . ஒரு Gentleman ஓட மனசை எப்புடி நோகடிச்சிட்டான் . இனிமே என்னை பத்தி என்ன நினைப்பான் என் ரசிகன் . ஆமாம் எந்த ஹோட்டல் ன்னு கூடவாடா தெரிஞ்சு வச்சிருப்ப . அப்புடி தான் வண்டியே ஓடுதுன்றியா . நம்ம சாலமன் பாப்பையா சொல்ற மாதிரி "அமெரிக்கா ஈரானுடன் படை எடுத்தார்ன்னு சொன்னா யாருய்யா படிக்கறா . எல்லாம் கிசு கிசு போட்டா தான் வருமானமே பாக்க முடியுது . நியாயம் தானே, நம்மாளு violence விரும்பலையா romance தான் விரும்பறான் . நாம தான் தப்பா புரிஞ்சிக்கிட்டோம் ".
அதென்ன கத்து குட்டி ? இவுரு பெரிய பழம் தின்னு கொட்டை போட்டவுறு . கப்ஸா கப்ஸாவா உடுவ . அதையும் நியூஸ்னு வாங்கி படிக்கணும் . உன் கற்பனை வளம் இருக்கே ஆகா . ஒரு சிங்கள் டீ க்கு இது ரொம்ப அதிகம் டா . நீ மட்டும் சினிமா பக்கம் போனீன்னா . அங்க மட்டும் போயிடாத . நீ எந்த மாதிரி படம் எடுப்பேன்னு பேப்பர்லேயே தெரியுது . அந்த topic க்கு இன்னொரு நாள் வருவோம் . இப்போ போய் தூங்க மட்டும் தூங்கிடாத . ஏன்னா நான் அடிச்சா தாங்க மாட்ட நாலு மாசம் தூங்க மாட்ட . நைட் எல்லாம் பொலம்பினே இரு .

Comments
Post a Comment