தமிழ்நாட்டின் தலை எழுத்தை மாற்றி எழுத புறப்பட்ட புயலானது கரையை கடக்கும் முன்னரே பின் வாங்கி விட்டது. கரையை கடந்தால் அக்கரையில் என்ன இருக்கும் என்பதை, அக்கறையோடு கவனித்ததால் தான் இந்த முடிவு. அப்படி இருக்கும் பொழுது குட்டி புயலுக்கு மட்டும் எப்படி தைரியம் வந்து விடும். குட்டிக்கு புட்டியை முகர்ந்து பார்த்தாலே மயக்கம் வந்து விடும் என்று விளம்பரம் செய்து விட்டு, எல்லா புட்டியிலும் கட்டிங் போட்டு விட்டு, டிஸ்கோவில் ஆடி கொண்டு இருக்கிறது. குட்டி போட்ட குட்டியும், குட்டிக்கு சளைத்தவன் இல்லை என்று குட்டியிலேயே ஆரம்பித்து விட்டது. இப்படி இருக்க கழக கண்மணிகள் மட்டும் எப்படி ஒழுங்காக வேலை செய்ய போகிறது. கண் போன்று கணக்கை பார்க்கும் என்று அனுப்பி வைத்தால், எந்த கணக்கில் ஓட்டை இருக்கிறது, அதை பயன்படுத்தி எவ்வாறு ஆட்டையை போடுவது என்பதிலேயே கண்ணாய் இருக்கிறது. கூட்டு சேர்ந்த கூட்டாளிகள் மட்டும் இளைத்தவர்களா என்ன என்று எண்ணும் அளவிற்கு குப்பையாய் இருக்கிறது அவர்கள் கூட்டு. இப்படி கூட்டி கொன்டே போய் கொண்டு இருக்கலாம். ஆனால் ஒன்றை மட்டும் சொல்லி கொள்ள ஆசை படுகிறேன். நாடு வளர வேண்...