ஏம்ப்பா நீயே சொல்லுப்பா யாருப்பா நல்லவன் யாருப்பா கெட்டவன்? அதை விலாவாரியா சொல்றேன் நல்லா கேட்டுக்கப்பா. மனசுல நல்லதே நினைக்கிறவன் தாம்பா நல்லவன். புரியல தெளிவா சொல்லுப்பா. நேர்மையா இருக்கணும்னு நினைக்கணும். ஒழுக்கமா நடக்கணும்னு நினைக்கணும். சம்பாரிச்சி தான் வாழனும். வாழ்க்கையில முன்னேறணும்னு நியாயமான வழியில உழைக்கணும். இப்படி எல்லா நல்லவனும் நடந்துக்கரானாப்பா? நான் மனசுல நெனைக்கனும்னு தான் சொன்னேன். எல்லா தடவையும் நேர்மையா நடக்க விட மாட்டானுங்கப்பா நம்ம நாட்டுல. அதனால தான் நினைக்கனும்னு சொன்னேன். இதை பத்தி மேல சொல்றேன். இப்போ கெட்டவன் யாருன்னு சொல்றேன் அதையும் கேட்டுக்கோ. அந்த தனி breedu நாய்க்கு நல்ல எண்ணமே வராது. ஏம்பா அப்புடி சொன்ன? தெரு நாய்க்கு கூட நல்ல எண்ணம் வரும்ப்பா. இவனுக்கு வராது. அதை தான் அப்படி சொன்னேன். நாயை விட கேவலமானவனா அவன். சரி அவன் குணத்தை பத்தி சொல்லுப்பா. எவன் pocketல pick pocket அடிக்கலாம். எவன் குடியை கெடுக்கலாம்னே திரிவான். குடியை கெடுத்துடுவானாப்பா? இவன் குடிக்கறதே கெட்டு போன ஊசன பருப்பு தண்ணி தான். அப்ப பருப்பு? அது மட்டும் நல்லதா குடுக்கட்டுமே, Ration கடைக்...