ஏம்ப்பா நீயே சொல்லுப்பா யாருப்பா நல்லவன் யாருப்பா கெட்டவன்? அதை விலாவாரியா சொல்றேன் நல்லா கேட்டுக்கப்பா.
மனசுல நல்லதே நினைக்கிறவன் தாம்பா நல்லவன். புரியல தெளிவா சொல்லுப்பா. நேர்மையா இருக்கணும்னு நினைக்கணும். ஒழுக்கமா நடக்கணும்னு நினைக்கணும். சம்பாரிச்சி தான் வாழனும். வாழ்க்கையில முன்னேறணும்னு நியாயமான வழியில உழைக்கணும். இப்படி எல்லா நல்லவனும் நடந்துக்கரானாப்பா? நான் மனசுல நெனைக்கனும்னு தான் சொன்னேன். எல்லா தடவையும் நேர்மையா நடக்க விட மாட்டானுங்கப்பா நம்ம நாட்டுல. அதனால தான் நினைக்கனும்னு சொன்னேன். இதை பத்தி மேல சொல்றேன். இப்போ கெட்டவன் யாருன்னு சொல்றேன் அதையும் கேட்டுக்கோ.
அந்த தனி breedu நாய்க்கு நல்ல எண்ணமே வராது. ஏம்பா அப்புடி சொன்ன? தெரு நாய்க்கு கூட நல்ல எண்ணம் வரும்ப்பா. இவனுக்கு வராது. அதை தான் அப்படி சொன்னேன். நாயை விட கேவலமானவனா அவன். சரி அவன் குணத்தை பத்தி சொல்லுப்பா. எவன் pocketல pick pocket அடிக்கலாம். எவன் குடியை கெடுக்கலாம்னே திரிவான். குடியை கெடுத்துடுவானாப்பா? இவன் குடிக்கறதே கெட்டு போன ஊசன பருப்பு தண்ணி தான். அப்ப பருப்பு? அது மட்டும் நல்லதா குடுக்கட்டுமே, Ration கடைக்கே போக மாட்டான். சரிப்பா அவன் குடிக்கற சரக்கு? வீனா போனதெல்லாம் ஒண்ணா போட்டு காய்ச்சின battery தண்ணி தான். இருந்தாலும் இவனோட சாராயம் prepare பண்ற innovative ideaவை பாராட்டி தானப்பா ஆகணும். அவன் என்னெல்லாம் சேர்த்து battery தண்ணிய prepare பண்றான்னு தெரிஞ்சா நீ இப்படி சொல்ல மாட்ட. அது தான பாத்தேன். Processing நல்லா பண்றானோன்னு நினைச்சேன். அத பத்தி சொல்லட்டா? வேணாம் வேணாம் அத பத்தி சொல்லிடாதே, நல்லா புரிஞ்சுது.
சரி இந்த நாய் நேர்மையா நடந்துக்குமாப்பா? நாய்னு சொல்லிட்டு breedயை விட்டுட்டயே. சொறி நாய் கூட்டம் கூட சண்டைக்கு வந்துடும். அப்புறம் Blue Cross case போட்டுடுவான். சரிப்பா தப்பா சொல்லிட்டேன் இந்த breedu நேர்மையை பத்தி சொல்லுப்பா? இதுக்கு நேர்மைனா என்னனே தெரியாது. நான் நேர்மையா officerக்கு லஞ்சம் குடுத்து protocol follow பண்ணேன்னு சொல்லும். என்னது புரோட்டால பால் ஊத்தி சாப்பிடுமா? இது அரிய வகை மிருகமா இருக்கே. இது புரோட்டாவே சாப்பிடாது. அப்புறம் எங்க பால். அது என்ன சாப்பிடும்னா. வேணாம் வேணாம் அது என்னன்னு எல்லாருக்கும் தெரியும். நீ topicக்கு வா.
ஊர்ல நிறைய பேர் லஞ்சம் தானேப்பா குடுக்கறான்? அவனுக்கு வேற வழி இல்லைன்னு செய்யறான். ஆனா இவன் ஊருக்கே லஞ்சம் வாங்குற வழியை உருவாக்கி குடுக்கறான். சரி அப்படின்னா வியாபாரிகள் வேற வழி இல்லைன்னு தான் லஞ்சம் குடுக்கறானா? அதே தாம்பா. லஞ்சம் குடுக்கலைன்னா இவன் தொழில் செய்யவே விட மாட்டான். நேர்மையான அரசியல்வாதிகள்னு நீ சொல்ற கட்சிக்காரன் கூட லஞ்சம் வாங்கறானேப்பா. ஆமாம் சரி தாம்பா. கட்சி நடத்த, கூட்டம் போட்டு பிரச்சாரம் பண்ண, கழக கண்மணிகள் கூட்டத்துக்கு வர பிரியாணி packet முதல் சாராய packet வரை எல்லாத்துக்கும் யாருப்பா காசு குடுப்பா? சொந்த காசை குடுத்து நாட்டுக்கு சேவை பண்ண சொல்றியா? நானே செய்ய மாட்டேன். அந்த அரசியல்வாதிகள் கிட்ட அவ்ளோ காசு முதல்ல இல்லப்பா. அப்போ இதுக்கு என்ன தாம்பா வழி? எல்லா பிரச்சாரத்தையும் Television News Channels and Official Party News Channelsல மாத்தணும். கொடி புடிச்சி கூட்டம் போட தடை பண்ணனும். எந்த பிரச்சாரம்னாலும் வூடகம் வழியாகவே பண்ண சொல்லணும். அது தான் வழி.
சரி pick pocketனு சொன்னியே அதை பத்தி கொஞ்சம் சொல்லுப்பா. இவன் ஊருல இருக்குற pocket எல்லாம் எப்புடி காலி பண்றதுன்னு பாப்பான். அது எப்படிப்பா? வாய் நமநமங்குது வா போய் ஒரு cutting போட்டுட்டே பேசலாம்னுவான். ஒரு cutting போட்டதுக்கு அப்புறம் வாயை கெடுத்துட்டப்பா ஒரு half வாங்கி குடுன்னுவான். இது தான் இவன் சங்கேத பாஷை, Secret Code Words. அப்போ இவன் பேச்சு திறமையில No.1 னு சொல்லு. ஆமாம் ஆமாம் அவன் கிட்ட பேச்சு குடுத்த பல பேருக்கு one toilet தான் வந்துச்சாம். ஆனா இவன் அவுங்கள போக விடாம, cutting வாங்கி குடுத்தா தான் விடுவேன்னுவான். அதனால தான் கருமமேன்னு வேற வழி இல்லாம இவனுக்கு வாங்கி குடுப்பானுங்க.
அப்போ இவன் interrogation பண்றதுல Interpolக்கு சமம்னு சொல்லு. இவன் தான. Cinema பாத்தா கூட அதை கவனிக்காம எப்போ interval வரும்னே காத்திருப்பான். ஏம்ப்பா அப்புடி? இவன் பாக்கறதே Bit படம் தான். Interval அப்ப தான் Bit போடுவான். அப்ப தான toiletக்கு போய் இவன் வேலைய செஞ்சு theatreயை நாறடிக்க முடியும். அதுக்கு தான் அப்புடி. சரி இவனை விடுப்பா. நல்லவனை பத்தி கொஞ்சம் சொல்லுப்பா.
நம்ம MGR சொல்ற மாதிரி தப்பு செஞ்சவன் திருந்தி ஆகணும். தவறு செஞ்சவன் வருந்தி ஆகணும். தப்பு செஞ்சவன் திருந்திடுவானாப்பா? ஏம்பா அவுரே நாலு நல்ல வார்த்தை சொன்னா திருந்திடுவானோன்னு சொல்லி பாத்தாருப்பா. அவன்லாம் திருந்தவே மாட்டாம்பா. நாய் வாலை கூட நிமித்திடலாம் இவன்கிட்ட முடியாதுப்பா. ஏம்ப்பா நாய் வாலை நிமித்த முடியுமாப்பா. Good Question. அவன்கிட்ட 1000 குடுத்து நிமித்த சொல்லி பாரேன். நிமித்திடுவானாப்பா? அப்புடி சொல்லி தான் உன்கிட்ட காசு வாங்குவான். போய் சல்பேட்டா சாராயம் அடிச்சிட்டு படுத்துடுவான். Evening வந்து நாய் வாலை பல தடவை நான் நிமித்தனேன், நீங்க தான் பாக்கல. அது திரும்பி சுரிட்டிக்குச்சின்னு சொல்லுவான். இருந்தாலும் அவன் புத்தி கூர்மையை பாராட்டி தாம்பா ஆகணும். அந்த கூர்மையை பத்தி தெளிவா சொல்லட்டா? இல்ல வேணாம். அதை பத்தி பல தடவை சொல்லிட்ட. மொதல்ல நல்லவனை பத்தி சொல்லுப்பா.
தவறு செஞ்சவன் வருந்தி ஆகணும். நல்லவனா இருந்தா தவறு செஞ்சா வருத்தப்படுவாமப்பா. தவறே செய்யாம யாரையும் இருக்க விட மாட்டானுங்க. ஆனா அதை முடிஞ்ச வரைக்கும் செய்யாம முயற்சி செய்யறவன் தாம்ப்பா நல்லவன். ஏம்ப்பா வாழ்க்கையில முன்னேறணும்னு சொன்னியே அதை பத்தி சொல்லுப்பா. நல்லவன் எப்பயுமே வாழ்க்கையில முன்னேறணும்னு நினைப்பாம்ப்பா. ஆனா அதுக்கு அவன் எடுக்குற வழி தான் முக்கியம். நியாயமா சம்பாரிச்சி, வரி கட்டி நம்பகமான தொழில் செஞ்சு யாரையும் ஏமாத்தாம உழைக்கறவன் தாம்பா நல்லவன். இப்ப புரிஞ்சுதுப்பா நல்லவனை பத்தி. வேற எதாவது குணம் அவன்கிட்ட இருக்குதாப்பா? இருக்குப்பா ஒரு முக்கியமான குணம். அது என்னப்பா? அவன் கடவுளை வழிபடுறவனா இருப்பாம்பா. அதை பத்தி கொஞ்சம் விலாவாரியா சொல்லுப்பா.
நல்லவன் கடவுள் இருக்குறார்னு நம்புவாம்பா. ஏம்பா அதுக்கு proof இல்லையேப்பா? அப்புடி கேக்கறவன்(Athiests) ஒருத்தனும் நல்லவன் இல்லப்பா. நல்லவனுக்கு கடவுள் நம்பிக்கை தானாவே வரும்பா. அது எப்படிப்பா? எல்லா மதத்துலையும், எல்லா கடவுளும், நல்லதை மட்டும் தாம்ப்பா உபதேசிக்கறாங்க. எந்த மதத்துலையும் திருடவோ, ஏமாத்தவோ யாருக்கும் சொல்லி தர்றது இல்லைப்பா. அதனால நல்லவன் எவனா இருந்தாலும், நல்லதை போதிக்கற மதத்தின் மேல எப்பவும் நம்பிக்கை வரும்ப்பா. இப்ப நல்லா புரிஞ்சுதுப்பா, நல்லவன் எப்பவும் கடவுள் இருக்காரா இல்லையான்னு தர்க்கம் பண்ண மாட்டான்.
நல்லவனா வாழுங்க, வாழ்க்கையில நல்லதே நடக்கும், துன்பங்கள் வந்தாலும் அது பனி போல சூரியன் முன்னாடி கரைஞ்சி போயிடும்.
Hara Hara Prapancha Deva

Comments
Post a Comment