தமிழ்நாட்டின் தலை எழுத்தை மாற்றி எழுத புறப்பட்ட புயலானது கரையை கடக்கும் முன்னரே பின் வாங்கி விட்டது. கரையை கடந்தால் அக்கரையில் என்ன இருக்கும் என்பதை, அக்கறையோடு கவனித்ததால் தான் இந்த முடிவு.
அப்படி இருக்கும் பொழுது குட்டி புயலுக்கு மட்டும் எப்படி தைரியம் வந்து விடும். குட்டிக்கு புட்டியை முகர்ந்து பார்த்தாலே மயக்கம் வந்து விடும் என்று விளம்பரம் செய்து விட்டு, எல்லா புட்டியிலும் கட்டிங் போட்டு விட்டு, டிஸ்கோவில் ஆடி கொண்டு இருக்கிறது. குட்டி போட்ட குட்டியும், குட்டிக்கு சளைத்தவன் இல்லை என்று குட்டியிலேயே ஆரம்பித்து விட்டது.
இப்படி இருக்க கழக கண்மணிகள் மட்டும் எப்படி ஒழுங்காக வேலை செய்ய போகிறது. கண் போன்று கணக்கை பார்க்கும் என்று அனுப்பி வைத்தால், எந்த கணக்கில் ஓட்டை இருக்கிறது, அதை பயன்படுத்தி எவ்வாறு ஆட்டையை போடுவது என்பதிலேயே கண்ணாய் இருக்கிறது.
கூட்டு சேர்ந்த கூட்டாளிகள் மட்டும் இளைத்தவர்களா என்ன என்று எண்ணும் அளவிற்கு குப்பையாய் இருக்கிறது அவர்கள் கூட்டு. இப்படி கூட்டி கொன்டே போய் கொண்டு இருக்கலாம்.
ஆனால் ஒன்றை மட்டும் சொல்லி கொள்ள ஆசை படுகிறேன். நாடு வளர வேண்டும் என்றால், நல்லவர்கள் ஆள வேண்டும். நல்லவர்கள் போல் முன்னாடி Actu குடுத்து விட்டு, எல்லோரும் நகர்ந்த பிறகு Kingfisherகு நான் தான் Kingu என்று கிக்குடன் மக்களை ஏமாற்றுபவர்கள் அல்ல. முன்னாடி பூமாலை போட்டு வருந்தி விட்டு, பின்னாடி மக்கள் எல்லாம் கோமாளிகள் என்று சிறிது விட்டு போகிறவர்கள் அல்ல.
சுருட்டுவதற்கு என்றே அரசியலுக்கு வந்திருக்கும் சுருளி ராஜன்கள், மொத்தமாய் சுருட்டி கொண்டு செல்வதற்கு முன், சுருக்கு பிடி போட வேண்டும் நாம். அவர்களை சுற்றி வளைத்து, சுட்ட பணத்தை எல்லாம் சுத்தமாய் வழித்து பிடுங்கி விட வேண்டும்.
சுத்தமாய் ஊரை பார்த்து கொள்ள நியமித்த ஆளை, இவர்கள் சுத்தமாக வேலை பார்க்க விடுவதில்லை. சுத்தமாய் இவர்களுக்கு அறிவில்லை என்று கூறினால், சத்தமே இல்லாமல் இலாக்காவை மாற்றி விடுகிறார்கள்.
ஆனால் ஒன்றை மட்டும் சொல்லி கொள்ள ஆசை படுகிறேன். திறமையான, நேர்மையான, உண்மையான இளைஞர்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் நாடு மட்டுமே இன்று உலகில் முன்னோடியாக திகழும்.

Comments
Post a Comment